நாட்டு மாடுகளை மீட்டெடுக்க உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – லால்குடியில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய ஜல்லிக்கட்டு பேரவையினர்

0 673
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடியில் ஜல்லிக்கட்டுப் பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் உள்ளிட்டோர் நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கிய சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு ஒன்றினை வழங்கியது. அதில் நாட்டு மாடுகளின் இனப் பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.வெளிநாட்டு மாடுகளை அதாவது கலப்பின மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்ககூடாது. ஜல்லிக்கட்டு போட்களில் பங்கேற்கும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து சான்று வழங்க வேண்டும். செயற்கை முறையில் இனப்பெருக்கும் நடைபெறுவதனை தடை செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை அடங்கிய உத்தரவினை உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவினை வழங்கிய சென்னை உயர்நீதி மன்றத்திற்கு நன்றி தெரிவித்து, வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவை மாவட்ட செயலாளர் காத்தான், தக்காளி சிவா, , ஜல்லிக்கட்டு வீரர்கள் கீழ கல்கண்டார்கோட்டை முருகானந்தம் , நவீன், ஆல்பர்ட் உள்ளிட்டோர் லால்குடி பகுதியில் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் கூறியதாவது….”என்னிடம் நான்கு நாட்டு இன ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 5 நாட்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறேன். நாட்டு பசுமாட்டுப் பால்களை இப் பகுதி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பில் நாட்டு மாடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் நாட்டு மாடுகளை மீட்டெடுக்க அளித்த உயர்நீதிமன்ற உத்தரவு என்னைப் போன்ற நாட்டுமாடுகள் வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி. இதனை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்தார்.”

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.