திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஈச்சம்பட்டி. இந்த ஊரில் கலப்பு திருமணம் செய்து கொண்ட 30 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், கோவில் நிகழ்ச்சிகள் முதல் இறுதி சடங்கு வரை எல்லா காரியங்களிலும் தங்களை ஒதுக்கி வைத்து வாழ விடாமல் தடுப்பதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 30 குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அரசியல் செல்வாக்கை வைத்து கலைத்து விடுகின்றனர் – எதிர்த்து பேசினால் ஊரை விட்டு ஓடு என்று அதிகாரத்துடன் மிரட்டுவதாக புகார் கூறுகின்றனர்.

மேலும் இதுகுறித்து கலப்புத் திருமணம் செய்து பாதிக்கப்பட்ட ரெங்கநாதன் – சீதா லெட்சுமி கூறுகையில்…”கோவில்களில் தேங்காய் உடைப்பதில் இருந்து, இறுதி சடங்கு வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் தங்களை ஒதுக்கி வைப்பதோடு கடைக்கு சென்று பொருட்களை கூட வாங்க விடாமால் விரட்டுவதாக புகார் கூறினர். இதில் சம்மந்தப்பட்ட திருப்பைஞ்ஞீலி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் கிராம பட்டயதார்கள் ரெங்கநாதன் உள்ளிட்ட கட்ட பஞ்டாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றார்

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA
