ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திருச்சியில் மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

0 585
Stalin trichy visit

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுக்க 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கி கால அவகாசம் வழங்கி தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கல்லூரி மாணவி கூறுகையில் பல்கலைக்கழக இயக்குனருக்கும்,ஆசிரியர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் நாங்கள் எழுதும் நேரடி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு நடக்கிறது. 2018 முன்னர் வரை தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றனர்.ஆனால் 4 ஆண்டுகளாக தேர்வு எழுதயவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெறும் சிரமம் இருப்பதாகவும் விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.இதனால் நேரடி வகுப்புகள் தொடங்கி ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…  https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.