ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டம்; 2ம் தேதி நடக்கிறது!

0 324
Stalin trichy visit

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. இக்கோயிலில் பங்குனி தேரோட்டம் வரும் 2ம் தேதி நடைபெறுகி றது. இதையொட்டி கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. எட்டுத்திக்கு கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர்,

அகிலாண்டேஸ்வரி, பிரியா விடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொடிமரம் அருகே வந்தனர். சிறப்பு பூஜைகளுக்குபின் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது எட்டுத் திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. அதுசமயம் கொடி மரங்களுக்கு கோயில் யானை அகிலா மரியாதை செலுத்தியது. சோமாஸ்கந்தர்,

அம்மன்வெள்ளி ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 2ம் தேதி நடக்கிறது. ஏப்ரல் 16ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. 18ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.