கவனத்தை திசை திருப்பி நகை திருடிய ஜோசியர்,மன உலைச்சலில் இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

0 440
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி தெருவை சேர்ந்த ஜெகன் என்பவரின் மனைவி சுகந்தி(26). இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்று எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி ஜோசியம் கூறுவதாக சொல்லி 35 வயது மதிக்கத்தக்க முன்பின் தெரியாத ஆசாமி ஒருவர் சுகந்தி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்பொழுது சுகந்தியின் கவனத்தை திசை திருப்பி வீட்டில் இருந்த தாலி சங்கிலி, தங்க நாணயங்களை அவர் திருடிச் சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுகந்தி வீட்டில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.