சட்டையில் தடவி எடுத்து வரப்பட்ட 21 லட்சம் மதிப்பிலான தங்கம் – மடக்கி பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்

0 542
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் (24) என்ற பயணி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (48) என்ற பயணிகளிடம் இருந்து சட்டையில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட 20.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து இருவரையும் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.