சாமவேதீஸ்வரர் கோயிலில் காலபைரவா அஷ்டமி விழா

0 35
CM

திருச்சி, நவ.17 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவர், பைரவர் இரு பைரவருக்கும் உலக நன்மையை கருதி சிறப்பு அபிஷேகம் ஆராதனை அலங்காரம் வடமாலை சாற்றி ருத்ர திரிசதி அர்ச்சனைகள் சேவிக்கப்பட்டு எல்லோருக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் அர்த்தஜாம பூஜையோடு இந்த பூஜை நிகழ்ந்தது. இந்த ஆலயத்தின் சிறப்பு அர்த்த ஜாம பூஜையில் பைரவர் விபூதியை வாங்கிச் சென்று அந்த விபூதியை உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதி பூசி அந்த விபூதி சாதத்தை கொடுத்து வந்தோயமானால் சர்வ ரோகங்கள் நிவர்த்தியாகி உடல் ஆரோக்கியம் பெற்று சீக்கிரமே குணமடைவது இந்த ஆலயத்தின் சிறப்பு. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!