காரில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: கார் ஓட்டுநரை தாக்கிய பொதுமக்கள் – காவல்துறையினர் விசாரணை

0 27
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 சிவகங்கையைச் சேர்ந்த மாரீசெல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம்  சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை மற்றும் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக காரில்  வந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த 15 சிறுமியை நேற்று மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து மாரீசெல்வன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார் பின்னர் மாலை 6:30 மணி அளவில் சிறுமியை மாரீசெல்வன் திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் காரில் இருந்து வீசி சென்று விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்களும் அப்பகுதி காவலர்களும் உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் கல்மந்தை காலனியில் கண்காணிப்பு கேமராக்களை காட்சிகளை ஆய்வு செய்தர். இதில் கார் ஓட்டுநர் மாரீசெல்வன் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து ஓட்டுநர் மாரீசெல்வனை தேடி வந்த பொதுமக்கள் இரவு 7.30 மணி அளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.  இதில் மாரீசெல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் இழைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.