“அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்” உல்லாசம் அனுபவிக்கும் இடமாக மாறிவரும் கொள்ளிடக்கரை; கண்டுகொள்ளுமா? காவல்துறை!

0 669
Stalin trichy visit

திருச்சி மாநகர கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ரவுடிகள் மீது
நடவடிக்கை எடுக்கவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். மேலும் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அடைக்க உத்தரவிட்டு

வருகிறார். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடதான் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம் தான். அந்த வகையில் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிட கரையோரம் கொள்ளிடம்-மேலூர் சாலையில் உள்ள வடக்கு வாசல் முருகன் கோவில் பின்புறம் இரவு 7 மணிக்கு மேல் ஏராளமானவர்கள் ஒன்று கூடி கொண்டு மது அருந்துவது, ஆட்டோவில் பெண்கள், திருநங்கைகளை அழைத்துவந்து உல்லாசம் அனுபவிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் பெண்களை வாகனங்களில்

அழைத்து வந்து விடிய விடிய உல்லாசம் அனுபவித்து வருகின்றனர். மேலும் மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மதுபாட்டில்களை உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனை கவனிக்காமல் அந்த வழியாக செல்பவர்களின் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் அடைந்து வருகின்றனர். காலை நேரத்தில் இப்பகுதியில் மதுபாட்டில்கள் சேகரிக்க வருபவர்கள்
சுமார் 5, 6 மூட்டைகள் மதுபாட்டில்களை சேகரிக்கும் அளவிற்கு இப்பகுதியில் மது அருந்த வருகின்றனர். கிட்டத்தட்ட அந்த பகுதியை குடிமகன்கள் ஒரு பார்போல் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த பகுதிகளில் ஒன்று சேர்ந்துகொண்டு கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட செயல்களுக்கு

திட்டங்களை தீட்டுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளிட ஆற்றங்கரையோரம் உள்ள முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான மூதாட்டிகள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள், பொதுமக்கள் உள்பட பலர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தப்பகுதியில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவதால் பெண்கள் முகம்சுழிக்க வைப்பதுடன் நடமாடவே பெரிதும் அச்சப்படுகின்றனர். பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது,

குடிமகன்கள் மதுபோதையில் அவர்களிடம் தவறாக நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுகிறது. பொது இடங்களில் மது அருந்தவோ, புகைபிடிக்கவோ கூடாது என சட்டம் உள்ள நிலையில் இதுபோன்ற செல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக கொள்ளிட ஆற்றங்களை மாறி வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட இப்பகுதியில் ஒன்றுகூடி மது அருந்தியவர்களில் அவர்களுள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை அடித்து கொலை செய்து ஆற்றங்கரையோரத்திலேயே புதைத்து சென்றனர். இதனை அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர். இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் இங்கு ஒன்றுகூடி மது அருந்துவதினால் மேலும் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.