புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடடத்தினை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, இன்று (22.6.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஒன்றியம், திருத்தியமலையில் ரூபாய்.19.72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடடத்தினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.,சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.சீ.கதிரவன், திரு.ந.தியாகராஜன்,
திரு.செ. ஸ்டாலின் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்(பொ)திரு. ரமேஷ் குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி . கங்காதாரிணி, ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மாலா ராமச்சந்திரன், ஊராட்சித் தலைவர் திரு. கலைச்செல்வி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.