குடமுருட்டி, உய்யக்கொண்டான், கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைப்பது குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே. என். நேரு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று (14.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். எம். சாய்குமார், இஆ.ப., நகராட்சி நிர்வாக ஆணையர் திரு. பொன்னையா,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு. சிவராசு, இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.
சௌந்தரபாண்டியன், திரு.செ.ஸ்டாலின் குமார், திரு.ந. தியாகராஜன், திரு.எம். பழனியாண்டி, திரு.எஸ்.இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.