“மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்” செய்த 2 பேர் மீது குண்டாஸ்!
திருச்சி அண்ணா சிலை அருகே உள்ள ஒரு லாட்ஜில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மாதம் 13ம் தேதி அந்த லாட்ஜில் போலீசார் சோதனை செய்த போது, கலைஞர் (வயது 37), வில்பிரட்மார்ஷெலின் (வயது 40) ஆகியோர் 2 பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பெண்களையும் மீட்ட போலீசார், கலைஞர், வில்பிரட்மார் ஷெலின்
ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கலைஞர், வில்பிரட்மார்ஷெலின் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ்கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.