டிப்பர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

0 190
Stalin trichy visit

திருச்சி, செப். 9  திருச்சி மாவட்டம் சமயபுரம் மண்ணச்சநல்லூர் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூரில் உள்ள நடுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (70). இவர் சமயபுரம் மண்ணச்சநல்லூர் சாலையில் உள்ள உணவகத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தான் வேலை செய்யும் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே செங்குளிப்பட்டியைச் சேர்ந்த வயதான ரங்கராஜன் (41)  எதிரே டிப்பர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நடந்து சென்ற வெங்கசாசலம் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெங்கசாசலம் படுகாயமடைந்து கீழே விழுந்தார்.விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினர்.இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.