மணப்பாறை அரசு பள்ளி மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு

0 55
National

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மணப்பாறை அரசு பள்ளி மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு

Click the image to Chat on Whatsapp

மணப்பாறை ஆக2: சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற மணப்பாறை லூர் அரசு பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

மணப்பாறை அடுத்த செவலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ரெ.வசந்தலெட்சுமி. இவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சனிக்கிழமை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டார். அதில் மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார். அவருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி.இ.ஆ.ப பதக்கம், கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.750-க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். ஊர் திரும்பியுள்ள மாணவி இன்று காலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது அவர்களை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டார். மாணவியை வெகுவாக பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!