லால்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
திருச்சி, ஜுன்2 திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் மாணவர் சேர்க்கைகான முதலாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜுன்2) தொடங்கியது. பிஎஸ்.ஸி (உயிரித் தொழில்நுட்பம்), இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. வருகின்ற 5 ஆம் தேதி பி.காம், பி.பி.ஏ, பி.ஏ(வரலாறு) ஆகிய பாடங்களுக்கும், 6 ஆம் தேதி பி.ஏ.(தமிழ்), பி.ஏ.ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்கள் மேற்காணும் தேதிகளில் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 10,11,12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகர்), நன்னடத்தை சான்றிதழ், புகைப்படும் (பாஸ்போர்ட் சைஸ் 4) பங்கேற்க வேண்டும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜுன் 12 ஆம் தேதி அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறும் என கல்லூரி முதல்வர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.