சத்துணவு அமைப்பாளரிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

0 225
trichymail

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி
பழனியம்மாள் (வயது 42). வேம்பனூர் அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் விழுப்புரத்தில் உள்ள கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார். நேற்றுமாலை வளநாடு கைகாட்டிக்கு வந்தவர் அங்கு செல்வராஜ் என்பவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புதுப்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார்.  வளநாடு பெரியகுளத்தின் கலிங்கி அருகே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பழனியம்மாள் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.