திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், துலையாந்தம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட செம்மரம், மகாமனி, மலைவேம்பு உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா உள்ளிட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.