ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்த நிலையில், ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை

வடபழனியில் இருந்து தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறைய மண்டல ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோவில் ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.