நரிக்குறவர் இன சிறுவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர் கோவிலில் நேற்று முன்தினம் வந்திருந்த ஒரு சில சிறுவர்கள் (நரிக்குறவர்) தங்களை கோவில் மண்டபத்திலுள்ள தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கப்பட்டதாகவும். அனைவரையும் மேஜையில் அமர வைத்து உணவு வழங்கி விட்டு தங்களை மட்டும் தரையில் அமர வைத்து உணவு அளித்ததாகவும் புகார் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இதுகுறித்து உத்தமர் கோயில் நிர்வாக அலுவலரை (மாதவன்) தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறப்பட்டது. அதில், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தில் தயிர் சாதத்திற்கு

இடமே இல்லை. சாப்பாடு, சாம்பார், ரசம் தினமும் ஒரு பொரியல் உள்ளிட்ட உணவுகளுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைவரையும் சரிசமமாக அமரவைத்து உணவுகள் முறைப்படி பரிமாறப்படுகிறது. கோவிலுக்கு வந்தவர்கள் கொடுத்த நெய்வேத்திய அன்னதானத்தை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் விளையாட்டாக இதுபோன்ற வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளனர். இன்று 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் செல்வராஜ் திருக்கோவிலை ஆய்வு செய்ய உள்ளார். 100% யாரும் திருக்கோவில் அன்னதானத்தில் புறக்கணிக்கப்படுவது இல்லை.
(குறிப்பு; புகார் வெளியிட்ட சிறுவர்கள் முன் தினம் அதே அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படமும் இதில் பதிவேற்றப்பட்டுள்ளது)