திருச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் பட்டியல் வெளியீடு!

0 1,092
Stalin trichy visit

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, கடந்த 22-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள

401 வார்டுகளில் பெரும்பான்மையான வார்டுகளை ஆளுகிற கட்சியான தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 401 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பட்டியல் வருமாறு;-

திருச்சி வடக்கு மாவட்டம்
பேரூராட்சி மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்
எஸ்.கண்ணனூர் – சரவணன்
தாத்தையங்கார்பேட்டை – ராஜலட்சுமி கணேசன்
உப்பிலியாபுரம் – சசிகலாதேவி ராஜசேகரன்
காட்டுப்புத்தூர் – சங்கீதா சுரேஷ்
பாலகிருஷ்ணன்பட்டி – மேகலா
மேட்டுப்பாளையம் – சௌந்தரராஜன்
மணச்சநல்லூர் – சிவசண்முககுமார்
தொட்டியம் – சரண்யா பிரபு

திருச்சி மத்திய மாவட்டம்
சிறுகமணி – குமுதவள்ளி தங்கவேலு
கல்லக்குடி – துரை
பூவாளூர் – புவனேஸ்வரி பால்ராஜ்
புள்ளம்பாடி – கோகிலா முத்துக்குமார்

திருச்சி தெற்கு மாவட்டம்
கூத்தைப்பார் – செல்வராஜ்
பொன்னம்பட்டி – திருமதி சரண்யா நாகராஜ்

Leave A Reply

Your email address will not be published.