அரசு பேருந்தின் பின்னால் மோதிய லாரி : பயணிகள் காயம்
திருச்சி, பிப். 26 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 125c என்ற சூரக்குடிபட்டி to ஸ்ரீரங்கம் செல்லும் அரசு பேருந்து 20 பயணிகளுடன் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் திருச்சி நோக்கி செல்லும் போது, நாகமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஈச்சேர் வேன் , மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் வேன் இரண்டும் அருகருகே வந்ததால் அரசு பேருந்தின் பின்புறம் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த 10 பேரில் மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் அந்த பகுதி மக்கள் உடனடியாக பேருந்தில் பயணித்தவர்களை மீட்டனர், தொடர்ந்து 108 அவசர உறுதி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் , தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிகண்டம் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் பகுதியில் சர்வீஸ் ரோடு இருந்தும் மாநகருக்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்படுவதில்லை அதுபோன்று முறையாக இயக்கப்பட்டால் இது போன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது
இரவு நேரம் என்பதால் பேருந்தில் அதிக கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது