திருச்சி தேசிய கல்லூரி மற்றும் இந்தியன் சயின்ஸ் மானிடர் இணைந்து கிருஷ்ணனை தேடி என்ற நூல் வெளியீட்டு விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது. சயின்ஸ் மானிடர் என்ற அமைப்பின் தலைவர் டீ.கே.வி ராஜன் இயற்றிய “கிருஷ்ணனை தேடி” என்ற புத்தகம் கிருஷ்ண ஜெயந்தியான இன்று வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன் புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி மற்றும் நந்தகோபால் ஆகியோர் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

புத்தகத்தின் ஆசிரியர் டி.கே.வீ ராஜன் புத்தகத்தை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கூறுகையில்…”நம் நாட்டில் மட்டுமே கடவுளின் பெயரால் அதிக அளவு மனிதர்களை அழிக்கிறோம் என்றும், இறைபக்தி நம் இரத்தத்தில் கலந்து இருக்கிறது. இந்த புத்தகம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் பற்றி அதிகம் பேசுகிறது. கிருஷ்ணன் ஒரு கதாபாத்திரம் அன்றும், என்றும் இந்தியாவில் இருந்து அகழ்வாராய்ச்சியில் அரசியல் ஆக்கப்பட்டு ஆராய்ச்சி நடைபெறுவதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்தார். நாம் குழந்தைகள் அனைவரும் மகாபாரதம் படிக்க வேண்டும் என்றும் தமிழகம் மகாபாரதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சுந்தரராமன், துணை முதல்வர்கள் பிரசன்ன பாலாஜி, நந்தகோபால் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் நீலகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA