சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா

0 109
voc

*சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா.
28 ம் ஆண்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தினர்*

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் 3 வது வார பூச்சொரிதல் விழா. 28 ம் ஆண்டாக திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சமயபுரம் காவல்நிலையத்திலிருந்து பூத்தட்டுகளை ஏந்தி யானை,குதிரையில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும்.இக்கொயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன் படி
இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 12 ந்தேதி தொடங்கியது.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காகவும், இத்திருதலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாரி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.

வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு கிழமை வரை அம்மன் விரதம் இருப்பது இக்கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

இந்நிலையில் 3 வது வார பூச்சொரிதல் விழாவான இன்று திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 28 ம் ஆண்டாக சமயபுரம் காவல் நிலையத்திலிருந்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,ஏடிஎஸ்பி,டிஎஸ்பி சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் யானை குதிரை ஊர்வலத்துடன் வான வேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க தட்டுகளில் பூக்களை ஏந்தி, தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

இன்று மூன்றாவது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் விழாக்கோலம் பூண்டது.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!