காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்- யார் அவர்? போலீசார் விசாரணை

0 425
Stalin trichy visit

திருச்சி- கல்லணை சாலையில் பொன்னிடெல்டா எதிர்புறம் காவிரி ஆற்றின் கரையோரம் ஆண் பிணம் மிதந்து வந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இறந்து கிடந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும்.

ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தபோது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஆற்றில் குதித்து இறந்தாரா? என்பது தெரியவில்லை. இதையடுத்து உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.