திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

0 572
Stalin trichy visit

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று முன்னறிவிப்பு தெரிவித்திருந்தது. நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மிதமான மழை பதிவானது. அதே போல் மண்ணச்சநல்லூர் முசிறி வாத்தலை போன்ற புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. நேற்று திருச்சி நகர் பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பொன்மலை- 19.40 மி.மீ, திருச்சி விமான நிலையம்- 33.10 மி.மீ, திருச்சி ஜங்ஷன்- 12.80 மி.மீ, திருச்சி டவுன் 6.30 மி.மீ, மண்ணச்சநல்லூர் தேவி மங்கலம் 31.00 மி.மீ, சமயபுரம்- 8.60 மி.மீ, வாத்தலை அனைகட்டு- 14.20, முசிரி 12.40 மி.மீ, புலிவலம்- 30 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு- 22.30 மி.மீ அளவிற்கு மழை பதிவானது.

Leave A Reply

Your email address will not be published.