காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது
திருச்சி ஜீவா நகர் காமராஜர் திருவை சேர்ந்தவர் மனோ(வயது 27). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜீவா நகர் பகுதியில் அவரது தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திகேயன்(19) என்பவர் மனோவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டதாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.