சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பணம் திருடியவர் கைது

0 389
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தனியார் பாதுகாப்பு அதிகாரி மாதவன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவில் உள் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் ஒருவர் கையை உள்ளே விட்டு பணம் எடுத்து தெரியவந்தது. இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரி மாதவன் அவரை கையும் களவுமாக பிடித்து சமயபுரம் காவல் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுரை கீழ அன்னாதோப்பு தங்கசாமி இல்லத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 48 வயதான பிரபு என்பது தெரியவந்தது.பின்னர் சமயபுரம் பாதுகாப்பு அதிகாரி மாதவன் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் போலீசார் அவரிடமிருந்து ரூ.1 930 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.