திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது!

0 427
Stalin trichy visit

திருச்சி அருகே மணிகண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் அந்த மைனர் பெண்ணை தனியாக பேச வேண்டுமென அழைத்து திருமண ஆசைவார்த்தை

 

கூறி பாலியல் அத்துமீறலில் முகமது ரபீக் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அந்த மைனர் பெண் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முகமது ரபிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.