திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சுவாமி அம்பாளுக்கு நித்தியப்படி பூஜைகளுடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்திரசேகரர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் புறப்பாடுகள் நடந்தன. அஷ்டக்கொடியேற்றம் 28ம் தேதி நடந்தது. இதனை அடுத்து நேற்று இரவு சுவாமி, அம்பாள் தெருவடச்சானில் வீதியுலா நடைபெற்றது. பின்னர்

இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கும், அம்பாளுக்கும் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வந்து அதன் நிலையை அடைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.