திருச்சி தென்னூர் பகுதியை சார்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவரது மகள் மலர்விழி மீரா(19) இவர் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்தார். அதே தெருவில் வசித்து வருபவர் பால முரளி கார்த்தி(37) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன 2019 ஆம் ஆண்டு இவர் மலர்விழி மீராவை ஒருதலை காதலால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட நீதிமன்ற மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர் பால முரளி கார்த்திக்கு (37) ஆயுள் தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த தொகையை இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார்.