“மது விற்ற 5 பேரை கைது” 350 மது பாட்டில்கள் பறிமுதல்!

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பதாக டிஐஜி சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் முசிறி வந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது

 

முசிறியின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற முத்துசாமி, செந்தில்குமார், தனபால், குமார், முத்துவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 820 மற்றும் 334 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.