திருச்சியில் பா.ஜ.க.வினர் காவல்துறையினருடன் வாக்குவாதம்
திருச்சி, டிச. 4 திருச்சியில் அனுமதி வெற்றிவிழா கொண்டிய பா.ஜ.க.வினர், காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து அடாவடியில் ஈடுபட்டனர்.
திருச்சியில் அனுமதி இல்லாமல் வெற்றி கொண்டாட்ட பேரணி நடத்த முயன்ற பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மத்திய பிரதேசம், ராஜஷ்தான், சட்டீஸ்கர் ஆகிய வடமாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. அதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், திருச்சியில் பாஜக வினர் தங்களது கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க, இனிப்பு வழங்கி கொண்டாடிணார்கள். பின்னர் போலீசாரின் அனுமதி இல்லாமல் திருச்சி இரயில்வே சந்திப்பு எதிரே உள்ள வழிவிடு முருகன் கோவிலில் இருந்து திருச்சி தலைமை தபால் நிலையம் நோக்கி நடை பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் வழிமறித்து தடுத்து நிறுத்திபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். அதில் பங்கேற்ற 150 நபர்களையும் கமராஜர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் ஆத்திரமடைந்த பாஜக வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஜக வினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து பேரணி செல்லாமல் இனிப்புகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்துவிட்டு பாஜக வினர் கலைந்துச்சென்றனர்.