நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

0 54
voc

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் 48 ம் நாள் மண்டலாபிஷேகம் நேற்று நடைப்பெற்றது.

கல்லக்குடியில் உள்ள நித்தியகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 47 நாட்களாக தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 48-ம் நாளான நேற்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை விநாயகர் பூஜையுடன் தொடர்ந்து யாகபூஜையும், பரிவார தெய்வங்கள் பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் பரிவாரி யாகசாலை, யாத்திராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிவன் கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவில், மால்வாய் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர் கோவில், மதுரகாளியம்மன் பெரியசாமி கோவில், திரவுபதி அம்மன், அய்யனார் கோவில், மாரியம்மன், எல்லையம்மன், ஓம்சக்தி கோவில்கள் மற்றும் நித்யகல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் பரிவார விமான கலசங்களுக்கும், மூலஸ்தானங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தை சிவஸ்ரீ தண்டபாணி என்ற கோபி சிவாச்சாரியார் தலைமையில் ஆலய குருக்கள் ராதாகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆகியோர் நடத்தினார்கள். விழாவில் கல்லக்குடி, முதுவத்தூர், கீழரசூர், மேலரசூர், பளிங்காநத்தம், கல்லகம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!