திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல் : 3 பேர் பலி
திருச்சி, மார்ச் 22 திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிந்தார். 9 பேர் படுகாயமடைந்தனர்.
சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலி.இதில் மகிஷா ஸ்ரீ (12),சுமதி (45)டிரைவர் கதிர் (47) பேர் பலியாகினர். இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .