போலி ஆவணங்கள் மூலம் நில விற்பனை மோசடி செய்தவர் கைது

திருச்சி, மார்ச். 22 திருச்சி கே.கே.நகரைச்சேர்ந்தவர் டேனியல் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலங்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரியல் எஸ்டேட் அதிபர் டேனியலை கைது செய்தனர்.