குடிநீர், பாதாள சாக்கடை, அம்ரூத் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

0 385
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் ஆணையர் கூட்ட அரங்கில், திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் அம்ரூத் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் துணை மேயர் ஜி.திவ்யா, ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் நிர்வாக பொறியாளர்கள், அனைத்து கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், அனைத்து கோட்ட இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் திட்டப்பணிகளின் ஒப்பந்தக்காரர்கள்,

திட்டப்பணிகளின் மேலாண் கலந்தாலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப்பணிகளின் ஒப்பந்தக்காரர்களான, ஸ்ரீஸ்ரீவிக்னேஷ்வரா கன்ஸ்ட்ரக்சன்ஸ், டெக்கான் இன்டரஸ்டிரிஸ் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் மேலாண் கலந்தாலோசகர் தாராஷா கன்சல்டன்சி நிறுவன குழுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் ஒப்பந்தக்காரர்களான, எஸ்.வி.டி இன்ப்ரா கான் நிறுவனத்தார் கலந்து கொண்டனர்.

சீர்மிகு நகரத்திட்ட குடிநீர் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளான, தென்னூர், அண்ணாநகர், புத்தூர், சிந்தாமணி, தில்லைநகர், மரக்கடை, மலைக்கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை புணரமைக்கப்பட்டு, 43114 வீட்டு இணைப்புகள் புதுப்பிக்கப்பட உள்ளது. 4 எண்ணிக்கை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மேம்படுத்தப்பட உள்ளதை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டுமெனவும், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு மேயரால் அறிவுத்தப்பட்டது.

மேலும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீர்ப்பணி நிலையங்களை புணரமைத்தல், மோட்டார் பம்புசெட்டுகளை புணரமைத்தல், புதிதாக மின்மோட்டார்கள் பொருத்துதல், நடைபாதை மேம்பாலத்தை புணரமைத்தல், புதிதாக 20 லட்சம் லிட் நீர்தேக்கத் தொட்டி கட்டுதல், மரக்கடை, தில்லைநகர், புத்தூர், உறையூர், விறகுபேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தரைமட்ட

நீர்த்தோட்டி மற்றும் மோட்டார் அறை கட்டுதல் மற்றும் 17.459 கி.மீ நீளத்திற்கு குடிநீர் உந்து குழாய் பதித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், போக்குவரத்திற்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு மேயரால் அறிவுத்தப்பட்டது.

பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் மறுசீரமைக்கும் திட்டப் பணிகள், வரையறுக்கப்பட்ட பகுதிகளில் (ABD Areas), மொத்தம் 37 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி 37 வார்டுகளில், 13 வார்டுகளில் முழுவதுமாகவும் மற்றும் 24

வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வீட்டிணைப்புகள் 55155 வழங்கப்படும், உந்து நிலையம் 7 எண்ணிக்கைகளும், கழிவு நீர் குழாய் 210 கி.மீ நீளத்திற்கும், பிரதான கழிவு நீர் உந்து குழாய் 7.24 கி.மீ நீளத்திற்கும் அமைக்கப்பட்டு வருவதை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு மேயரால் அறிவுத்தப்பட்டது.

அம்ரூத் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் (Phase-II&III) ஒப்பந்தக்காரர்களான, சுப்பையா கன்ஸ்ட்ரக்சன்ஸ், ஆங்கர் செராமிக்ஸ், இக்கோ புரொடக்சன் மற்றும் L&T நிறுவனத்தினர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் மேலாண் கலந்தாலோசகர் ஷா கன்சல்டென்சி நிறுவன குழுத் தலைவர், மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அம்ரூத் பாதாள சாக்கடை திட்டம்

பகுதி – IIல், 25 வார்டு பகுதிகளில் 5 வார்டுகளில் முழுவதுமாகவும், 20 வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து மேற்கொள்ளுமாறும், பகுதி – IIIல் 17வார்டு பகுதிகளில் 4 வார்டுகளில் முழுவதுமாகவும், 13 வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து மேற்கொள்ளுமாறும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு மேயர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.