திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தப்பட்டு,
மனு பெட்டிகள் மூலமும் வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது. இதன் இடையே கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து சில மாதங்கள் மீண்டும் குறைதீர் கூட்டம் நேரடியாக நடத்தப்பட்டது. மீண்டும் உரு மாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல்
குறைந்துள்ளதை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீர்கூட்டம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே வரும் மார்ச் 7ம் தேதி (நாளை) முதல் திங்கட்கிழமை தொடங்கி ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெ றும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக
பெறப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கான கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாகக் கொடுத்து தீர்வு காண லாம். மனுக்கள் கொடுக்கவரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வர வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.