பைக்மோதி ஆண் ஒருவர்பலி; வாலிபர் மீது வழக்கு!

0 429
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா திருவளர்சோலை அருகே பொன்னூரங்கடரம் கிட்டுகோனார் களம் அருகே சாலையில் நடந்து சென்ற 50 வயது ஆண் மீது, அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திம்மராயசமுத்திரம்

விஏஓ கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். இதில் விபத்தை ஏற்படுத்திய திருவளர்சோலை கீழத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கரண்(வயது 18) என்பவர் மீது வழக்குப்பதிந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH

 

Leave A Reply

Your email address will not be published.