தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இருவகையான தடுப்பூசிகளும் முதல் மற்றும் இரண்டாவது தவணையாக கடந்த முறை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 332 நபர்களுக்கு செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நாளை ஊரகப் பகுதிகளில் 256 இடங்களிலும் நகர்புற பகுதிகளில் 126 இடங்களிலும் என மொத்தமாக 382 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நடத்தப்பட உள்ளது.

இதில் இரு வகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்தத் தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு நோயிலிருந்து காத்துக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy