சார்ஜா புத்தக திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களோடு கலந்து கொண்டு, வாசிப்பின் முக்கியத்துவம் (Significants of Reading) எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அவர் பேசும் போது சிலர் கோவிலில் இருப்பதை விரும்புவார்கள்.சிலர் குடும்பத்தினருடன் இருப்பதை விரும்புவார்கள்.நல்ல வாசகர்கள் புத்தகங்களுடன் இருப்பதை விரும்புவார்கள்.
எங்கள் திராவிட இயக்கம் எழுத்தின் மூலம் பல சாதனைகளை செய்துள்ளது.நூல்கள் சமூகத்தை மாற்றக் கூடியது.
அறிஞர் அண்ணாவின் ‘சரோஜா ஆறணா’ சிறுகதையும், இணையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலும் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய இலக்கியங்கள்.
எங்கள் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது!
எழுத்தாளர்களை என்றும் போற்றக்குடியவர்கள் தமிழர்கள்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு சார்ஜா வாசகர்கள் அனைவரும் வருகை தர வேண்டும்.
Just 10 to 15 minutes a day with a book is enough to spark your curious little one’s interest’ என்கிறது Unisef அமைப்பு
தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வாசிக்க வேண்டும்!
UIS என சொல்லக்கூடிய Unesco institute for Statistics அமைப்பின் ஆய்வறிக்கை 617 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பும், கணித அறிவும் எட்டவில்லை என்கிறது. எனவே குழந்தைகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும்
[ Govt Schools are not a sign of poverty. Govt schools are a sign of pride

இந்நிகழ்வில் ஷேக் அப்துல்லா அப்துல் அசீஸ் ஹூமைத் அல் காசிம், காளிமுத்து, SS.மீரான் ஆகியோரும் மாணவ மாணவிகளும், ஆசிரிய பெருமக்களும், சார்ஜா நகர் தமிழ் மக்களும், சார்ஜா பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.