திருச்சி கேம்பியன் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தில் 33 தொகுதியாக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின்திருச்சி(மே) தொகுதியில் அமைந்துள்ள கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.

ஆய்வில் பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் கணினி அறை நீச்சல் குளம் மற்றும் பள்ளியின் கட்டிடங்களின் தன்மை மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் ஆசிரியர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து, மாணவர்களிடம் அவர்கள் கற்கும் பாடங்களிள் வினாக்கள் எழுப்பி உரையாடினார்.