சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 404
Stalin trichy visit

திருவெறும்பூர் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்கள் தொடக்க விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
நவல்பட்டு ஊராட்சி வார்டு எண் 29 அண்ணாநகர் ஸ்பேஸ் 1, தார்சாலை திட்ட மதிப்பு 6,75,000, அண்ணாநகர் ஸ்பேஸ் 3 திட்ட மதிப்பு 4 50,000 மதிப்பிலான கான்கிரீட் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியில் இருந்து வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்மில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதனுடன் இணைந்த பைப்லைன் உடன் கூடிய குடிதண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

முகாமில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மானியத்துடன் கூடிய கடனுக்கான காசோலையை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

பத்து குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம், 5 லட்ச ரூபாய்
பெற்றுக்கொண்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.