“ரூ.74.80 கோடியில் நான்கு வழித்தட சாலை பணி” அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

0 622
Stalin trichy visit

திருச்சி-திண்டுக்கல் சாலையில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.74.80 கோடியிலான நான்கு வழித்தட சாலைப் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், கண்காணிப்புப் பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, சீனிவாசராகவன், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் நீதிமன்ற ரவுண்டானா வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள்,
திருச்சி அண்ணாசிலை முதல் மல்லாட்சிபுரம் (குடமுருட்டி) வரையிலான உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள், திருச்சி திருவெறும்பூர் ரயில்வே பாதையின் வழியே மக்கள் செல்லும் வழியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.