பள்ளி மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி நேரில் ஆறுதல்

0 249
Stalin trichy visit

பள்ளி மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி நேரில் ஆறுதல் திருச்சி, மார்ச் 13 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த வந்த மாணவர் மவுளீஸ்வரன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் இறந்தார். இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தோளூர்பட்டியில் இறந்து போன மாணவனின்  வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சருடன் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.