மாண்புமிகு அமைச்சர்….மாண்புமிகு மாணவராக…. “ஆய்வு படிப்பின் ஆராய்ச்சியின் முன்வடிவத்தை சமர்ப்பித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 449
Stalin trichy visit

தமிழகத்தின் இளம் அமைச்சர்! துடிப்பாக பணியாற்றக்கூடிய, இளைஞர் பட்டாளம் சூழ்ந்த ஒரு அமைச்சர். பாசத்திற்கும் பஞ்சமில்லை நேசத்திற்கும் பஞ்சமில்லை! தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக வலம் வருபவர். அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, மாணவர் சேர்க்கை விகிதம் உயர்வு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் என இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தன்னுடைய பணிவான செயலால் பலரை கலங்க வைத்துள்ளார்!

ஆம், “அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி”

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று முதற்கொண்டு ஒரு மாணவனாகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறார் என்றால் அது மிகையாகாது. அதற்கு ஏற்றார் போலவே தன்னுடைய பி.எச்டி படிப்பையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்து மாணவர்களின் நலம் குறித்து தன்னுடைய ஆராய்ச்சியை தொடங்கி அமைச்சராக ஒருபுறமும் மாணவராக மறுபுறமும் பணியாற்றி தன்னுடைய ஆய்வினை திருச்சி தேசியக் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார்.

 

உடற்கல்வியில் எப்போதும் உற்சாகமாக செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ். காலை முதற்கொண்டே சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகள் செய்வது என தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் அதிகாலை வேலையை உடல் நலத்திற்காக ஒதுக்குபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் உடற்கல்வி துறையில் பி.எச்டி படிப்பினை தற்போது துவங்கியுள்ளார்.

இந்தநிலையில் பிஎச்டி ஆராய்ச்சிப் திட்டத்திற்காக *”கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பள்ளி குழந்தைகளிடையே திறன் மேம்பாட்டுக்கான உடல் செயல்பாடுகள்”* என்னும் தலைப்பில் தேசிய கல்லூரி ஆராய்ச்சி குழு உறுப்பினர்களிடம் தன்னுடைய ஆய்வின் ஆராய்ச்சிக்கான முன்வடிவத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் சமர்ப்பித்தார்.

பள்ளி குழந்தைகளுக்கு உடற்கல்வியில் தொடர்புடைய திறனை மேம்படுத்துதல் அவற்றை அடையாளம் காணுதல், மாணவர்களின் பங்கேற்பு கற்றலில் ஈடுபாடு அதிகரிப்பதற்கான ஒரு முறையான பரிந்துரைக்கும் நோக்கங்கள் என தன்னுடைய ஆய்வு நோக்கங்களை *ஆராய்ச்சி மேற்பார்வையாளரும், தேசிய கல்லூரியின் துணை முதல்வரும், உடற்கல்வித்துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி, இணை மேற்பார்வையாளர் அப்துல் ரசாக், ஜமால் முகமது கல்லூரி கணினி அறிவியல் இணைப்பேராசிரியர் மற்றும் குழு உறுப்பினர் ஜான்சன் பிரேம்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், மற்றும் தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் ஆகியோரிடம் தன்னுடைய பி.எச்டி ஆய்வின் ஆராய்ச்சிக்கான முன்வடிவத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி* சமர்ப்பித்து தன்னுடைய ஆய்வினை தற்போது பி.எச்டி மாணவராக துவங்கியுள்ளார்.

அமைச்சராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பள்ளிகல்வித்துறை பணிக்காக தன்னுடைய ஆய்வினை குழந்தைகளுக்காக அர்ப்பணித்து பி.எச்டி படிப்பினை ஆரம்பித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…..https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

 

Leave A Reply

Your email address will not be published.