தந்தை பெரியார் பிறந்தநாள் – மாலை அணிவிக்க ப.குமார் அழைப்பு!
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…. நாளை 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் காட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்படவுள்ளது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி, மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி பகுதி கழக, நகர கழக, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கழக, கிளை கழக, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள், மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும், கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.