புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

0 273
Stalin trichy visit

திருச்சி, அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கொம்பு, காவிரி இடதுகரை வாத்தலைகிராமத்திலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்குத் தண்ணீரை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்டல தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைச்செல்லம், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், முருகானந்தம், மாவட்ட பிரமுகர் வைரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.