புதிதாக கட்டப்பட்டுள்ள 2 பயணியர் நிழற்குடைகளை அமைச்சர் கே.என்.நேரு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

0 346
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் குமுளூர் மற்றும் கண்ணாக்குடி ஆகிய ஊர்களில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டப்பட்டுள்ள 2 பயணியர் நிழற்குடை கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து லால்குடி ஊராட்சி ஒன்றியம் இடையாற்றுமங்கலம் ஊராட்சி சேஷசமுத்திரம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நியாயவிலை கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 13.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதியதாக நியாய விலை கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, சேர்மன் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.