தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் பேரவையினர் அடையாள உண்ணாவிரதம் அறிவிப்பு

0 345
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை மலைவாழ் மக்களின் அடிப்படை உரிமைகளான ஜாதிச்சான்றிதழ், வருவாய்துறை துறை சம்பந்தமான பதிவுகள், பத்திரப் பதிவுத்துறை ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் பேரவையினர் அடையாள உண்ணாவிரதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இது பற்றி பேரவை தலைவர் பெருமாள் கூறுகையில், மலைவாழ் பழங்குடி இன மக்களின் சொத்துக்களை பிற இனத்தவர்கள் கிரையம் செய்வதற்கு அரசு தடை ஆணை உள்ள நிலையில், 2005 முதல் 2013 கால கட்டத்தில் வரம்புகளை மீறி, பச்சைமலை சோளமாத்தியில், 192 ஏக்கர் நிலப்பரப்பு, கிரையம் செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும், பழங்குடியின மக்களுக்கான ஜாதிச்சான்றிதழ் வழங்குவதில் அலைக்கடிக்கப்படுவதாகவும், பழங்குடியின மக்களிடையே நிலம் வாங்குவது விற்பது பரிவர்தனைகளில் உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், அரசு விதிகளை மீறி கெடுபிடிகள் உள்ளதாகவும், இவைகளை கண்டித்து, நவம்பர் மாத இறுதியில் உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.