திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்!

0 523
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில் காலை முதல் மாலை வரை அனைத்து வார்டுகளிலும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு உடனடியாக தீர்வு காண்பதக உறுதி அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக அரியமங்கலம் ஏழாவது வார்டு பவளம் நகர் பகுதியில் மழை நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளது அதனை பார்வையிட்டு உடனடியாக அகற்றுவதற்கு பொதுமக்களிடம் உறுதியளித்தார் .

அரியமங்கலம் எஸ் ஐ டி எதிர்புறத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் குளம்போல் தேங்கி கிடக்கும் நீரை அகற்றவும் நோய் பரவாமல் பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்
இந்நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் பகுதி கழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் மற்றும் வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.